Wednesday, September 16, 2009

முதலீடு செய்யும் உங்களின் பணம் நீங்கள் பாடுபட்டு சேர்த்த பணம்

ஒரு நல்ல தகவலறிந்த முதலீட்டாளர் தான் நன்கு பாதுகாக்கப்பட்ட முதலீட்டாளர்

ஒருவர் தான் முதலீடு செய்வதற்கு முன் முதலீடு பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பின்னரே முதலீடு செய்வதற்கு தன்னை தயார்படுத்தி கொள்ள வேண்டும். பின் வரும் இந்த ஆலோசனை கடைபிடித்திருந்தால் பல முதலீட்டாளர்கள், தங்களை நஷ்டத்திலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆகவே, முதலீட்டாளர்களே! ஞாபகமிருக்கட்டும். " முதலீடு செய்யும் உங்களின் பணம் நீங்கள் பாடுபட்டு சேர்த்த பணம்".

ஏன் என்ற கேள்வி? இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை ? பாடல்வரி யாருக்கும் மறக்காது. கேள்விகள் கேட்கப்படவேண்டும். அதற்கு தக்க பதில்களை கேட்டு பெறவேண்டும். நாங்கள், உங்களுக்காகவே சில கேள்விகளை தயார் செய்துள்ளோம். முதலீடு செய்யும் முன்பாக உங்கள் தரகர், பரஸ்பர நிதி மேலாளர் அல்லது உங்களையே நீங்கள் இக்கேள்விகளை கேட்டுக் கொள்ள வேண்டும். உங்கள் தரகர் நீங்கள் கேட்கும் கேள்விகளை கேட்டு சற்று பின் வாங்க வேண்டும். நீங்கள் கொஞ்சம் விபரமானவர், மேலும் நீங்கள் சற்றும் அசந்தவர் இல்லை என்று யோசிக்க வேண்டும். சற்று பின் வாங்கினாலும், உங்கள் கேள்விகளுக்கு அவர் மகிழ்ச்சியுடன் பதில் உரைப்பார். ஒரு புத்திமான் தனக்கு வாடிக்கையாளராயிருப்பதில் அவர் பெருமிதம் கொள்வார். தங்கள் வியாபாரத்தை இழப்பதை காட்டிலும் உங்கள் கேள்விகளுக்கு பதில் கொடுப்பதை தன் கடமையாக கொள்வார். கேளுங்கள்! கேளுங்க! கேட்டுகிட்டே இருங்க!

பங்கு சந்தையில் நுழைபவர் தன் முதலீடுக்கு ஒரு அரண் அமைத்து கொள்வதினால், எதிர்காலத்தில் வருந்தும் நிலைக்கு ஆளாக மாட்டார். முதலீட்டாளர், தங்களை பாதுகாத்துக் கொள்ள, சிலவற்றை ஏன்? செய்ய வேண்டும், சிலவற்றை ஏன்? செய்யக்கூடாது என்று ஒரு பட்டியல் தயாரித்துள்ளோம்.
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்.
நான் ஏன் முதலீடு செய்ய வேண்டும் ? நான் எவ்வளவு முதலீடு செய்யலாம்? நான் எங்கே முதலீடு செய்வது? நான் முதலீடு செய்யும் சந்தர்பங்களை நழுவ விட்டதால் உண்டான நஷ்டங்கள் என்னென்ன? எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்யலாம் ? இது, ஒரு சிறந்த முதலீடுதானா ? எனது முதலீட்டு குறிக்கோளுக்கு இந்த முதலீடு ஒத்துவருமா? என்னால் எவ்வளவு ரிஸ்க் (அபாயம்) எடுக்க முடியும் ? நஷ்டங்களை ஏற்பட்டால் , தாங்கிக்கொள்ள தயாரா ? நான் விரும்பும் சமயத்தில் எனது முதலீட்டை விற்று பணம் பண்ண முடியுமா ?
ஒரு பங்கினில் முதலீடு செய்யும் முன் உங்களை நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகள் ?
இந்த பங்கினை நான் ஏன் வாங்க வேண்டும் ? இந்த பங்குகள் எனக்கு, லாபபங்கு, அல்லது வட்டி வருவாய் அல்லது முதல் பெருக்கத்தை தேடித்தருமா ? என்னுடைய கால அவகாசத்திற்குள் எனது வருவாய் எதிர்பார்ப்புகளை ஈடு செய்யுமா ? இந்த பங்கினை வாங்குவதால் ( மற்றும் வைத்திருப்பதால், பின்னர் விற்பதால் ) எனக்கு உண்டாகும் செலவுகள் என்னென்ன? எப்போது பின்வாங்கி (விலகி ) கொள்ளலாம் ? எனக்கு பணம் தேவையானபோது, இவற்றை விற்று பணம் பண்ணிக்கொள்ள முடியுமா ? எந்த காரணிகள் எனது முதலீட்டின் மதிப்பை அதிகரிக்கும் / குறைக்கும்? (வட்டி விகித மாற்றங்கள், அரசு கொள்கை மாறுதல்கள், அதிகரிக்கும் தொழில் போட்டி பொருளாதார நசிவு, பங்கு சந்தை, தள்ளாட்டம், போர் , மற்றும் இயற்கை சீற்றங்கள் முதலியன ) இந்த பங்கிற்கென உள்ள ஆபத்துக்கள் என்னென்ன ? நான் பங்கு கொள்ள இருக்கும் எந்த கம்பெனி எவ்வளவு காலம் தொழிலில் உள்ளது ? எந்த கம்பெனியின் நிர்வாகம் அனுபவமிக்கதா ? முதலீட்டாளர்களை அரவணைக்கும் கம்பெனியா ? போட்டியாளர்களை ஒப்பிடுகையில் இந்த கம்பெனி நல்ல முறையில் உள்ளதா ? பங்கிற்கு உள்ள தரவரிசையின் முன்சரித்திரம் உள்ளதா ? கடந்த கால செயல்திறன் எதிர்காலத்திலும் இருக்கும் என்பது என்ன நிச்சியம் ? பங்குகளை பற்றிய மேல் விவரங்கள் எங்கு கிடைக்கும் ? கடைசியாக வெளியான கம்பெனியின் ஆண்டறிக்கை, மற்றும் வெளியிட்டு ஆவணங்கள் எங்குக் கிடைக்கும் ? செபிஉடன் இந்த பங்கு ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளதா ? இது ஒரு உயர்தர பங்கா? இல்லை தரம் குறைந்த பங்கா?
உங்கள் தரகர் / உதவி தரகரை நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகள் :
நீங்கள் ஒரு தரகர் ? / உதவி தரகரா ? நீங்கள் செபிவுடன் பதிவு பெற்றவரா ? நீங்கள் செபியுடனான உங்களின் பதிவு சான்றிதழை காட்ட முடியுமா ? பங்கு சந்தை மாற்றக பதிவு சான்றிதழையும் காட்ட முடியுமா ? நீங்கள் எந்த பங்கு மாற்றகத்தில் அங்கத்தினராக உள்ளீர்கள் நீங்கள் அல்லது உங்கள் நிறுவனம் எவ்வளவு காலமாக சேவை அளிக்கிறிர்கள் ? நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பங்கு மாற்றங்களில் அங்கத்தினராயிருப்பின் , என்னுடைய பங்கு பரிமாற்றங்களுக்கு உள்ளதிலே நல்ல விலை கொடுப்பிர்களா ? நீங்களோ அல்லது உங்களது நிறுவனமோ என்ன விதமான பயிற்சி மற்றும் அனுபவம் பெற்றுள்ளிர்கள் ? ஏதாவது ஒழுங்குமுறை ஆணையம் அல்லது வேறு எவரேனும் உங்கள் மீதோ எப்போதேனும், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளர்களா ? ஆம் என்றால் விளக்கம் தர முடியுமா ? நான் உங்கள் வாடிக்கையாளர் ஆகும் பட்சத்தில் நான் உங்களுக்கு கொடுக்க வேண்டிய கமிஷன் தொகை அல்லது சேவை கட்டணங்கள் என்னென்ன ? தரகர் - வாடிக்கையாளர் ஒப்பந்தம் கையொப்பமிட்ட என்னென்ன ஆவணங்கள் தேவை ? எவ்வளவு சீக்கிரம் எனது பரிவர்த்தனையை செயல்படுத்த முடியும் ? உங்களுடனான பரிவர்த்தனை துவங்கிய பின்னர் நம் ஒப்பந்த சீட்டு எவ்வளவு சீக்கிரம் எனக்கு கிடைக்கும் ? ஒரு பங்கு வாங்குதல் அல்லது விற்பதற்கு என்னென்ன ஆவணங்கள், எத்தனை நாளுக்குள், நான் உங்களுக்கு கொடுக்க வேண்டியிருக்கும் ? எனது பரிவர்த்தனைக்கு எப்போது நான் பணம் கொடுக்க / வாங்க வேண்டி இருக்கும்? குறிப்பிட்ட ஏதாவது பரிவர்த்தனைகளுக்கு தனியாக ஏதேனும் அதிக பணம் கட்ட வேண்டி இருக்குமா ? பின்னர் எப்போதேனும் ஒரு குறை ஏற்பட்டால் என்ன விதமான தீர்வுகள் கிடைக்கும் என்று விளக்க முடியுமா ?
பரஸ்பர நிதியில் முதலீடு செய்யும்முன் உங்களை நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்.
இந்த நிதியின் முன் சரித்திரம் என்ன? என்ன விதமான பங்குகளில் இந்த நிதி முதலீடு செய்யப்படுகிறது ? எப்போதெல்லாம் பங்கு தொகுதி மாற்றபடுகிறது ? எனது முதலீடு கரைத்து போககூடிய வண்ணம் ஏதாவது பங்குகளில் முதலீடு செய்யப்படுமா ? ஒரேவகை சேர்ந்த வேறு ஏதேனும் நிதி அல்லது ஒரு குறியீட்டு எண்ணுடன் ஒப்பிடுகையில் நமது நிதியின் செயல் திறன் என்ன ? யூனிட்டுகள் வாங்கும் போது என்னுடைய கட்டணங்கள் என்ன? நிதிக்குள் இன்றைய எனது நிகர சொத்து மதிப்பு என்ன? யூனிட்டுகளை விற்கும் போது எனது கட்டணங்கள் என்ன ? விற்ற யூனிட்டுகளுக்கு நான் எப்போது பணம் பெற இயலும் ? எத்தனை கால இடைவெளிக்கொருமுறை எனது பங்கு பட்டியல் அட்டவணை எனக்கு தரப்படும் ? உங்களை பரஸ்பர நிதி முகவர்/விநியோகஸ்தரை கேட்க வேண்டிய கேள்விகள் . இந்திய பரஸ்பரநிதி சங்கத்தில் நீங்கள் அங்கத்தினரா? என்னென்ன விதமான நிதி பொருட்கள் நீங்கள் வழங்குகிறிர்கள்? உங்கள் பட்டியலில் இல்லாத நிதி பொருட்கள் ஏதேனும் சந்தையில் உள்ளனவா ? அப்படியானால் ஏன் உங்களிடம் இல்லை ? உங்கள் வாடிக்கையாளருக்கு உகந்தது இல்லை என்று சேர்க்க வில்லையா ? அல்லது உங்களுக்கு குறைவான கமிஷன் தான் கிடைக்கும் என்பது போன்ற காரணங்களால் இல்லையா? எனக்கு அவை பொருந்துமாயின் அவற்றை எனக்காக பெற்றுதர முடியுமா ? நீங்கள் அல்லது உங்கள் நிறுவனம் எவ்வளவு காலம் இந்த தொழிலில் இருக்கிறிர்கள் ? என்ன விதமான பயிற்சி மற்றும் அனுபவம் பெற்றுள்ளிர்கள் ? வேறு ஒரு நிதியை நான் வாங்குவதை காட்டிலும் உங்கள் நிதியை வாங்குவதால் நீங்கள் பணம் பண்ணுகிறீர்களா ? அப்படி நீங்கள் பணம் பண்ண முடியாவிட்டாலும் உங்கள் சிபாரிசு இதே நிதிக்கு தானா ? இந்த நிதியை வாங்குவதால் உண்மையிலேயே எனக்கு நற்பலன் தானா ? இந்த பரஸ்பர நிதியை வாங்குவதால் எனக்கு உண்டாகும் செலவு எவ்வளவு? இன்றைய தினம் அதனை விற்றால் எனக்கு எவ்வளவு கிடைக்கும்? இந்த முதலீட்டில் எனக்கு ஒரு குறை தீர்க்கவேண்டுமானால் யாரை நான் அணுக வேண்டும்? எந்த விதத்தில் நீங்கள் எனக்கு உதவ முடியும்? AMFI அல்லது வேறு ஏதேனும் ஒழுங்கு முறை ஆணையம் உங்களை நெறிபடுத்தியுள்ளதா?
கேளுங்கள்! கேளுங்க! கேட்டுகிட்டே இருங்க ! மறக்காதிர்கள் ! மறந்து இருந்து விடாதிர்கள் !

முதலீட்டில் செய்ய வேண்டியவை
எப்போதும் செபியில் பதிவு பெற்ற இடைதரகர்களையே நாடுங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு நகல் உங்கள் கைவசம் இருக்கட்டும் (விண்ணப்பம், ஒப்பந்த சிட்டு, பெற்றுக்கொண்டதுக்கான அத்தாச்சி சிட்டு. ) கம்பெனிகளுக்கு அனுப்பும் எந்த ஆவணத்தின் நகலும் உங்களிடம் இருக்க வேண்டும் . அனுப்பும் எந்த ஆவணமும் ஒரு நம்பத்தகுந்த கூரியர் அல்லது பதிவு தபாலில் அனுப்புதல் உத்தமம் . ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அன்றைக்கன்றே ஒப்பந்த சிட்டு பெறுதல் அவசியம். பட்டியல் அட்டவணையும் பெறப்பட வேண்டும் . போதுமான பணம் கைவசம் தயாராக வைத்து கொள்ளுங்கள் . பங்குகளை விற்க என்னும்போது அவற்றையும் கைவசம் தயாராக வைத்திருக்க வேண்டும் . ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தொடர்து உங்கள் கவனம் இருக்க வேண்டும். உடனுக்குடன் ஆவணங்கள் கைக்கு கிடைக்க வேண்டும் இல்லாவிடில் தரகர் , கம்பெனி ஆகியோரை உடனே தொடர்பு கொள்ளுதல் அவசியம். தரகர், முகவர் ஆகியோருக்கு கொடுக்கப்படும் உங்கள் அறிவுறுத்தல்கள் தெளிவாக முரண்படாது இருக்க வேண்டும். உங்கள் தேவைகள் டிமாட்டிலா அல்லது காகித வடிவிலா என்பதும் தெளிவு பட கூற வேண்டும் . பிரச்சனைகள் என்று வரும்போது உடனடியாக செயல்படுங்கள் .
கீழே குறிப்பிட்டுள்ள பணிகளை உடனடியாக செய்யுங்கள் .
தரகரை தொடர்பு கொண்டு உங்கள் பிரச்சனையை விளக்குங்கள் எங்கே தவறு நடந்திருக்கும் என கண்டுபிடியுங்கள் தரகரால் தீர்வு காண முடியாத பட்சத்தில் பங்கு மாற்றகத்தை தொடர்பு கொள்ளுங்கள். அங்கும் தீர்க்க முடியவில்லை என்றால், சம்மந்தப்பட்ட ஆணையத்திடம்

புகார் தெரிவியுங்கள் . உங்கள் பிரச்சனையை சுருக்கமாக தெளிவாக கூறுங்கள் .
முதலீட்டில் செய்யக்கூடாதவை
பதிவு பெறாத தரகர்களை தவிர்த்திடுங்கள் . எவ்வளவு நன்றாக தெரிந்தவராயினும் , பரிவர்த்தனைக்காக ஆவணங்களை எக்காரணம் கொண்டும் நழுவ விடக்கூடாது. ஒரு பெரிய வருமானம் வரும் என்ற மாய தோற்றத்திற்கு இரையாகாதிர்கள் . இந்த நிதி நிறுவனங்கள் வழங்கும் எந்தவொரு சான்றிதழையும், பதிவு பத்திரங்களையும் கண்டு ஏமாந்து விடாதீர்கள். அவை பங்குகளுக்கு சம்பந்தமே இல்லாதவையாக இருக்க வாய்புண்டு. டிப்ஸ் (உடனடி செய்திகள்) எனப்படும் வதந்திகளை நம்பி பரிவர்த்தனை செய்யாதிர்கள் . முதலீட்டில் வரும் அபாயங்களை எப்போதும் மனதில் இருத்துங்கள் . உங்களின் முதலீட்டு பணத்தை பின் தேதியிட்ட காசோலைகளாக தந்தால் ஏற்காதீர்கள் அவை உத்திரவாதமில்லாதவை பிரச்சனைகள் வரும் போது பயந்து மனம் கலங்கி விடாதிர்கள் . சம்மந்தப்பட்ட நபர்களையோ அல்லது அதிகாரிகளையோ சந்திக்க தயங்காதிர்கள் .
நீங்கள் உங்களையே கேள்விகள் பல கேட்டு, தெரிந்து, தெளிந்து முதலீட்டி வெற்றி அடைய வாழ்த்துக்கள் !!!

3 comments:

  1. Cahya கிரானா கடன் லிமிடெட் உலகம் முழுவதற்குமான முன்னணி சுயாதீன கடன் நிறுவனங்களில் ஒன்றாகும். நாம் நன்றாக நிறுவப்பட்ட மற்றும் உங்கள் தேவைகள் மற்றும் ஆண்டுகளில் தனிப்பட்ட தேவைகளை ஒரு நல்ல புரிதல் உருவாக்கியுள்ளது. நாம் மிகவும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிகிச்சை மற்றும் தொழில் நட்பு மற்றும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஒரு சேவையை வழங்கும் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் நடைமுறைகள் நாம் ஒவ்வொரு நிரல் எங்கள் நெகிழ்வான அணுகுமுறை சேர்ந்து ஒரு குறைந்தபட்ச உங்கள் சூழ்நிலையில், முறைப்படி பொருத்தமாக ஒரு தயாரிப்பு முடிக்க, மற்றும் அந்த உறுதி செய்ய, நீங்கள் பொருந்தும் வடிவமைக்கப்பட்ட, உங்கள் கடன் விண்ணப்பம் உறுதி. நாங்கள் வாடிக்கையாளர்கள் மாற்ற மற்றும் அவர்களின் வாழ்க்கையை விட 47 ஆண்டுகள் மேம்படுத்த உதவி மற்றும் நாம் தொழில்கள் மற்றும் தனிநபர்கள் அனைத்து வகையான கடன் வழங்குகின்றன ஒரு தனிப்பட்ட நிலையில் உள்ளன, உண்மையில் சுயாதீன உள்ளன. எங்கள் இலக்கு உங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய உள்ளது மற்றும் உங்கள் திருப்தி எங்களுக்கு மிகவும் முக்கியமானது ஆகும். என்று நீங்கள் எங்கள் சேவைகளை ஆர்வமாக இருந்தால் இன்று நாம், 2% வட்டி கடன் கொடுக்க எங்களுக்கு திரும்ப பெற வேண்டும் ஏன் உள்ளது.
    மின்னஞ்சல்: cahya.creditfirm@gmail.com

    ReplyDelete
  2. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

    நல்ல நாள்

    நீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:

    1 நிறுவனத்தின் கடன்
    2. வணிக கடன்
    3. குடியிருப்பு கடன்
    4. ஆட்டோ கடன்
    5. கார் கடன்

    நாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.

    எங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.

    Whatssap எண்: +2347061892843
    ஸ்கைப்: fredlarry12

    கையொப்பமிடப்பட்ட
    மேலாளர்
    திரு ஃப்ரெட் லாரி

    ReplyDelete
  3. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

    நல்ல நாள்

    நீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:

    1 நிறுவனத்தின் கடன்
    2. வணிக கடன்
    3. குடியிருப்பு கடன்
    4. ஆட்டோ கடன்
    5. கார் கடன்

    நாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.

    எங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.

    Whatssap எண்: +2347061892843
    ஸ்கைப்: fredlarry12

    கையொப்பமிடப்பட்ட
    மேலாளர்
    திரு ஃப்ரெட் லாரி

    ReplyDelete