Wednesday, September 16, 2009

நீங்கள் தின வர்த்தகத்திற்கு புதியவரா?

அப்படியானால் முதலில் இதைப் படியுங்கள்!!!!

இவ்வர்த்தகத்தை தொடங்கும் முன்னெர் இக்கேள்விகளை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்
நீங்கள் அவசரத்தில் நல்ல முடிவு எடுக்கக் கூடியவரா? நல்ல மன உறுதி உடையவரா? எளிதில் பிறர் மன நிலையை நன்கு அறிந்துக் கொள்ளக் கூடியவரா? நஷ்டத்தை தாங்கிக் கொள்ள கூடியவரா? நல்ல பொருளாதார வசதி உடையவரா?
இதற்கேல்லாம் ஆம் எனில் நீங்கள் இதில் நுழையலாம்.

சரி! நுழைந்தாகி விட்டாச்சி!!! பின்ன என்ன செய்ய வேண்டும். அதை இங்கு பார்ப்போம்!!!

இவ்வர்த்தகத்தில் ஈடுபட ஆசையிருந்தால் நீங்கள் முதலில் உங்களின் சந்தை அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். சந்தையை பற்றி அறிய அதனைப் பற்றிய செய்திதாள்களையும், புத்தகங்களையும் தினமும் வாசித்து வர வேண்டும்.

அதிலிருந்து பங்கின் நிலவரங்களை குறித்து வைத்துக் கொண்டு, அதனை கவனித்து வர வேண்டும். பின்னர் நாம் தின வர்த்தகத்திற்கு தயாராகி விட்டோம் எனக் கருதினால் முதலில் காகித புத்தகத்தில் பரிவர்த்தனை செய்ய ஆரம்பிக்க வேண்டும். இக்காகித வர்த்தகம் செய்யும் போது உண்மையில் பணத்தைக் கொண்டு வர்த்தகம் செய்வது போல் கருதி ஈடுபட வேண்டும். வர்த்தக நாள் முடிவில், ஏற்பட்ட லாப/நட்டங்களை குறித்துக் கொண்டு, நட்டம் அதிக அளவில் ஏற்பட்டால், நமது வர்த்தக முறையில் எங்கு தவறு ஏற்படுகிறது எனக் கண்டறிந்து அவற்றை திருத்த முயல வேண்டும்.

இந்த காகித வர்த்தகத்தில் நாம் விற்பன்னர் ஆகிவிட்டோம் எனத் தெரிந்தால் மட்டுமே தின வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும்.
எக்காரணமும் கொண்டு நீங்கள் ஒரு பங்கை பற்றி நன்கு அலசி ஆராயாமல் வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது. பிறர் சொல்வதையோ/ அறிவுரைகளை பின்பற்றி வர்த்தகம் செய்யாதீர்கள். தொலைப் பேசி வழியாகவோ/ குறுந்தகவல்களின் செய்திகளின் அடிப்படையிலோ வியாபாரம் செய்யாதீர்கள். இல்லாவிட்டால் செக்கு மாட்டின் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். அதில் வருமானம் அதிக தரக்கூடியதாக தோற்றமலிக்கலாம். ஆனால் நீங்கள் செலுத்த வேண்டிய சேவைக் கட்டணங்கள்/ வரிகள்/ மற்றும் பிற செலவுகளைக் கழித்துப் பார்த்தால் உங்களுக்கு சொற்ப லாபமே கிட்டலாம். மேலும் உங்களால் இச்சேவையை வாழ்நாள் முழுவதும் கை கொள்ள முடியாது. எனவே கூடிய மட்டும் உங்களின் சமயோசித புத்தியைக் கொண்டு பரிவர்த்தனை செய்யுங்கள். நஷ்டத்துடன் ஆரம்பித்தாலும் பரவாயில்லை... விரைவில் நீங்கள் அதை கற்று தேர்ந்து விடுவீர்கள். உங்களுக்கென்று நீங்களே ஒரு வெற்றிக்கான யுக்தியை அமைத்துக் கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.
இப்போது சந்தையின் போக்கு , சந்தையின் வியாபார நிலை ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும்.
சந்தையின் தொடக்கம் வீழ்ந்து காணப்படுகிறதா? அல்லது உயர்ந்து காணப்படுகிறதா? வீழ்ந்ததற்கு காரணம் என்ன? உயர்ந்ததிற்கு காரணம் என்ன? வாங்குபவர்கள் அதிகமா?/ விற்பவர் அதிகமா? பங்கு அடங்கியுள்ள தொழிற் பிரிவின் நிலை என்ன? பங்கைப் பற்றிய தற்போதய தகவல்கள் என்ன?

போன்றவற்றை பற்றி நன்கு தெரிந்தப் பின்னரே பங்கை வாங்குவது/ விற்பது பற்றி முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வர்த்த்கத்தில் ஈடுபடும் முன்னர், சிலவற்றை மிக கவனமாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
எந்த பங்கில் வர்த்தகம் செய்கிறோம்? எவ்வளவு பணத்தில் செய்கிறோம்? எந்த சந்தையில் (காளை/கரடி) நுழைகிறோம்? Stop Loss எனப்படும் நஷ்ட தடுப்பை பயன்படுத்துகிறோமா? பங்கின் வாங்குபவர்/விற்பவர் எண்ணிக்கை என்ன? பங்கைப் பற்றிய நல்ல செய்திகள் ஏதுவேனும் உள்ளதா? அதன் மூல பொருட்களின் விலையிலோ/ வரிச் சுமையிலோ ஏதேனும் மாற்றம் உள்ளதா? அக்கம்பெனியின் வருமானத்திலோ/லாபத்திலோ/ செயல்திறனிலோ முன்னேற்றம் உள்ளதா? லாப பங்கு கொடுக்கப் போகிறதா? புதியதாக ஏதேனும் ஒரு நிறுவத்தை வாங்கப் போகிறதா? அல்லது இணையப் போகிறதா? உபரி பங்குகள் வழங்க உள்ளனவா? தலைமையில் மாற்றமோ? அல்லது புதிய நிர்வாக மாற்றம் உள்ளதா?

இப்படிப்பட்ட சில கேள்விகளுக்கு விடை தெரிந்தப் பின்னர் ஈடுபட்டால் உங்களின் முதலீட்டிற்கு பாதுகாப்பு தருவதோடு அல்லாமல் நல்ல மன நிறைவைத் தரும்.
இவ்விடம் நாம் வருவது பணம் சம்பாதிக்க மட்டுமே!!!! இழப்பதற்கு அல்ல!!!

நாம் எப்படி பட்டவராய் இருத்தல் வேண்டும் என்பதையும், ஒரு பங்கைப் பற்றி எவ்வளவு விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதையும் பார்த்தோம்.
சந்தையை வீழ்த்தும்/உயர்த்தும் சில காரணிகள் பின்வருமாறு
பருவ கால நிலைகள் பண வீக்கம் உள் நாட்டு/ அயல் நாட்டு சண்டைகள் பொருளாதார கொள்கைகள் அரசாங்க கொள்கைகள் அரசியல் காரணங்கள் சமூகக் காரணங்கள் மூலப் பொருட்களின் விலைவாசி உள்ளிருப்போர் வர்த்தகம் பண வீழ்ச்சி பெட் ரோலிய விலை இயற்கை பேரழிவு விளைவுகள் அயல் நாட்டு முதலீட்டாளர்களின் செயல்பாடுகள் நிர்வாக குளறுபடி/ மோசடி பிற சர்வதேச பரிமாற்றகங்கள் முதலீட்டாளர்களின் பேராசையும்/பயமும் ஆகியன.

சரி . இன்று நம் சந்தையின் தொடக்கம் உயருமா? வீழுமா? என்பதை அறிந்துக் கொள்ள ஆர்வமுள்ளவரா நீங்கள், அப்படி என்றால்
நீங்கள் கவனிக்க வேண்டியது பின்வருமாறு,
அமெரிக்க பங்கு சந்தையின் முடிவுகள் ஆசிய பங்கு சந்தைகளின் காலை நிலவரங்கள் பணத்தின் மதிப்பு, பெட்ரொலின் விலை தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் பரிவர்ததனை ஆகும் பங்குகளின் நிலவரங்கள் முந்தைய நாட்களின் அயல் நாட்டு முதலீட்டாளர்களின் செயல்பாடுகள் அரசு அறிவிக்கவிருக்கும் கொள்கைகள் லண்டன் மெட்டல் வர்த்தக மையத்தில் விற்பனையாகும் உலோகங்களின் விலை நிலவரங்கள்

போன்றவற்றின் அவ்வப் போதைய நிலவரங்களை தெரிந்து , அதற்கு தக்கவாறு வர்த்தக முறையை பின்பற்ற வேண்டும்.

இத்தின வர்த்தகத்தில் ஒவ்வொருவரும் வித விதமான யுக்திகளை கையாண்டு வெற்றி அடைகிறார்கள். நீங்களும் உங்களுக்கான வெற்றி முறையை கண்டு பிடித்து வளம் பெற வாழ்த்துக்கள்!!!

1 comment:

  1. which type shares are gains in today level low rate share types

    ReplyDelete