Thursday, September 10, 2009

ஆப்ஷன் - பாகம் 3

ஆப்ஷனை வாங்குபவர்களில் 90 சதவிகிதம் பேர் அதை Exercise செய்வதில்லை, நஷ்டமடைகிறார்கள். அவ்வளவு பணமும் ஆப்ஷனை விற்பவர்கள் பாக்கெட்டில். Call ஆப்ஷனை நீங்கள் வாங்குவதாயிருந்தால் குறைந்தது 2 மாதங்கள் கழித்து உள்ள Strike Price-ல் வாங்குங்கள்.

இருப்பதிலேயே சுலபமான வழி, Covered Call முறை தான். நல்ல முறையில் நடத்தப்படும் கம்பெனியின் பங்குகளை வாங்குங்கள். வாங்கிய விலையை விட அதிகமாக உள்ள Strike Price-ல் Call ஆப்ஷனை விற்று விடுங்கள். அந்த ஆப்ஷன் Exercise செய்யப்பட்டாலும், செய்யப்படாவிட்டாலும் உங்களுக்கு லாபம் தான். வாங்கிய பங்கின் விலை ரொம்ப குறைந்தால் மட்டும் தான் பிரச்னை, அதற்கு தான் நல்ல பங்குகளை வைத்து ஆப்ஷனில் டிரேட் செய்ய வேண்டும்.
உதாரணம்:
இன்று Genentech (DNA) $87.72க்கு விற்கிறது. நான் 100 பங்குகளை வாங்குகிறேன். $8772 செலவு.
Jan 2006-க்குள்ள $90 Strike Price-ல் Call ஒப்பந்தத்தை $470க்கு விற்கிறேன். $470 வரவு.

Jan 20, 2006 அன்று DNA $90க்கு மேல் விற்றால் உங்கள் Call ஒப்பந்த்தப்படி $90க்கு DNA பங்குகளை நீங்கள் விற்று விட வேண்டும். அப்படி செய்தால் உங்களின் லாபம் = $9000-$8772+$470 = $1028.

Jan 20, 2006 அன்று DNA $90க்கு கீழே விற்றால், நீங்கள் விற்ற Call ஒப்பந்தம் காலாவதியாகிவிடும். எனவே DNA 100 பங்குகளும் உங்கள் கையை விட்டு போகாது. ஆனால் கிடைத்த $470 பிரீமியம் உங்களுக்கு லாபம். நீங்கள் திரும்பவும் April 2006க்குள்ள Call ஒப்பந்தத்தை விலைக்கு விற்கலாம்.

DNA பங்கு $90க்கு கீழ் ரொம்பவும் குறைந்தால் தான் உங்களுக்கு நஷ்டம் வரும். பங்கு சந்தையில் பணத்தை முதலீடு செய்யும் போது எப்போதுமே லாபம் கிடைக்கப் போவதில்லை. நஷ்டங்களும் வரத்தான் செய்யும். லாபத்தை அதிகப்படுத்தி நஷ்டத்தை குறைக்க ஒரு ரகசியம் உள்ளது. அதன் பெயர் கட்டுப்பாடு. Covered Call எழுதுவதற்காக பங்குகளை வாங்கும் முன்பே எவ்வளவு நஷ்டத்தை உங்களால் தாங்கிக்கொள்ள முடியும் என்று தீர்மானிக் கொள்ளுங்கள். மேலே சொன்ன உதாரணத்தில் DNA $77க்கு குறைவாக போய் விட்டால் நீங்கள் விற்ற Call ஒப்பந்தத்தை திரும்பவும் வாங்கி விடுங்கள். அதன் விலையும் $470லிருந்து $40க்கு குறைந்திருக்கும். பங்குகளில் $1000 நஷ்டம், அதே சமயம் ஆப்ஷனினால் சுமார் $400 லாபம். மொத்தம் $600 நஷ்டம். இந்த மாதிரி Stop loss லெவலில் உறுதியாக இருந்தால் நஷ்டங்களை கட்டுப் படுத்தலாம். இல்லாவிடில் நஷ்டங்கள் நம்மை படுத்தி விடும்!

இது வரை நீங்கள் ஆப்ஷனில் டிரேட் செய்யாமல் இருந்தால், Paper trade செய்து பாருங்கள். அதாவது ஒரு பேப்பரில் மேலே உதாரணத்தில் சொன்னது போல டிரேடை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வாரமும் அந்த டிரேட் எப்படி போகிறது என்று பார்த்து வாருங்கள். Jan 20, 2006 அன்று அந்த டிரேட் எப்படி முடிந்திருக்கும் என்று சோதித்து பாருங்கள். இப்படி பல முறை Paper trade செய்த பிறகு உங்களுக்கு ஆப்ஷன் சுலபமாக பிடிபடும். Optionsxpress போன்ற தரகர்களின் வலைத்தளத்தில் Paper trade பயிற்சி செய்து பார்க்கலாம்.

Call ஒப்பந்தம் போன்று Put ஒப்பந்தம் என்றொரு முறை உள்ளது. நீங்கள் வாங்கி வைத்துள்ள பங்குகளை பாதுகாக்க Put உதவும். அதைப்பற்றி அடுத்த பாகத்தில்...

No comments:

Post a Comment