Monday, October 26, 2009

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் -11

என்ன நண்பர்களே பதில் தயார் செய்து விட்டீர்களா, ஓரளவிற்காவது நீங்க முன்னாள் படித்த விஷயங்கள் ஞாபகத்தில் வருவதற்கு இந்த பயிற்ச்சி உதவி செய்ததா, அப்படியானால் சந்தோசமே, சரி நாம் அடுத்த விசயத்திற்கு வருவோம், நான் சொன்னது போல முக்கியமான சில உருவங்கள் சந்தையில் உருவாகும் போது ஏற்ப்படும் மாற்றங்கள் என்ன, மற்றும் அந்த உருவங்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்,
மேலும் இந்த உருவங்கள் BOTTOM OUT மற்றும் TOPS OUT என்ற நிலைகளில் நல்ல பலத்துடன் இருக்கும் அதே நேரம் நடுவிலும் இந்த உருவங்களுக்கு சக்தி இருந்தாலும் அதிக சக்திகளை எதிர்பார்க்க முடியாது, விமானி கப்பலை இயக்குவது போல, சரி விசயத்திற்கு வருவோம்..

இது போன்ற முக்கியமான உருவங்கள் சந்தைகளில் அநேகம் உள்ளது அனைத்தையும் பார்ப்பது சற்று TENSION ஐ தான் தரும் ஆகவே இந்த உருவங்களில் மிக முக்கியமான சில வற்றை பற்றி பார்ப்போம்

முக்கியமான சில உருவங்கள் :–

DOJI, HARAMI, HAMMER, ENGULFING, PIERCING LINE, 3 METHOD BEARISH & BULLISH PATTERNS, 3 WHITE SOLDIER, 3 BLACK CROWS, DOCK CLOUD COVER, இது போன்ற விசயங்களை கொஞ்சம் ஆழமாக பார்ப்போம், கண்டிப்பாக உதவியாக இருக்கும்

1. DOJI:-

முதலில் DOJI என்ற பெயருடன் ஒரு குறிப்பிட்ட பங்கின் ஒற்றை CANDLE லில் ஏற்ப்படும் வடிவத்தை பற்றி பார்ப்போம், இந்த DOJI என்பது ஒரு குறிப்பிட்ட தினத்தில் ஒரு பங்கில் ஏற்ப்படும் வடிவமாகும், ஒரு CANDLE எப்படி இருந்தால் DOJI என்று நாம் அறியலாம் என்பதை சொல்கிறேன் கவனமாக கேளுங்கள்,

அதாவது ஒரு பங்கின் அன்றைய தின OPEN PRICE மற்றும் CLOSE PRICE இரண்டிற்குமான இடைவெளி மிக மிக குறைவாக இருக்கும் சூழ்நிலையில் உருவாகும் CANDLE DOJI எனப்படும், அதாவது அந்த பங்கு OPEN ஆனா விலையில் இருந்து உயரே எவளவு சென்றாலும், அல்லது கீழே எவளவு வீழ்ச்சி அடைந்தாலும் அல்லது மேலும் கீழும் மாறி மாறி ஏறி இறங்கினாலும் இறுதியாக தான் வர்த்தகத்தை தொடங்கிய புள்ளியிலோ அல்லது அந்த புள்ளிக்கு மிக மிக அருகில் சற்று மேலேயோ அல்லது கீழேயோ முடிவடைந்தால் அன்றைய தின அந்த பங்கின் CANDLE ஒரு கூட்டல் குறி போல் இருக்கும் அதற்க்கு பெயர்தான் DOJI எனப்படும்,

இந்த DOJI யில் இரண்டு வகை உண்டு, இரண்டு வெவ்வேறு இடங்களில் இது தோன்றும் போது இதற்க்கு இரண்டு வெவேறு பெயர்களும் உண்டு அவற்றை பற்றியும் பார்ப்போம், அதற்க்கு முன் DOJI யின் படங்களை பாருங்கள்

PICTURE 1:-

DOJI யின் வகைகள் :-

MORNING STAR DOJI

EVENING STAR DOJI

LONG UPPER LEG DOJI

LONG LOWER LEG DOJI

MORNING STAR DOJI :-



ஒரு பங்கின் முக்கியமான தாங்கு நிலைகளிலோ (SUPPORT ZONE) அல்லது ஒரு குறிப்பிட்ட வீழ்ச்சியை ஒரு பங்கு அடைந்த பிறகோ ஏற்ப்படும் ஒரு DOJI அமைப்பிற்கு MORNING STAR DOJI என்று பெயர், இவ்வாறு ஒரு பங்கில் குறிப்பிட்ட வீழ்ச்சிக்கு பிறகு ஏற்ப்படும் இந்த DOJI அமைப்பு நமக்கு சில கருத்துகளை சொல்லும், அதன் அடிப்படையில் இந்த பங்கு இனி மேற்கொண்டு கீழ் இறங்குவதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும், இனி தொடர்ந்து முன்னேறும் வாய்ப்புகள் அதிகம் என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம்,

இதன் அடிப்படையில் இந்த பங்கில் இனி தொடர்ந்து SHORT SELL செய்வது ஆபத்தை உருவாக்கும் என்றும், இனி இந்த பங்கில் BUYING செய்வதே சிறந்தது என்று எடுத்துக்கொண்டு BUYING இல் கவனம் செலுத்தலாம், MORNING STAR DOJI இன் படத்தை பாருங்கள்

PICTURE 2 :-

EVENING STAR DOJI :-



ஒரு பங்கின் முக்கியமான தடை நிலைகளிலோ (RESISTANCE ZONE) அல்லது ஒரு குறிப்பிட்ட உயர்வை ஒரு பங்கு அடைந்த பிறகோ ஏற்ப்படும் ஒரு DOJI அமைப்பிற்கு EVENING STAR DOJI என்று பெயர், இவ்வாறு ஒரு பங்கில் குறிப்பிட்ட உயர்விற்கு பிறகு ஏற்ப்படும் இந்த DOJI அமைப்பு நமக்கு சில கருத்துகளை சொல்லும், அதன் அடிப்படையில் இந்த பங்கு இனி மேற்கொண்டு உயர்வதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும் இனி தொடர்ந்து கீழ் இறங்கும் வாய்ப்புகளும் அல்லது அடுத்த கட்ட நகர்விற்கான CONSOLIDATION PHASE க்குள் நுழையும் வாய்ப்புகளும் அதிகம் என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம்,

இதன் அடிப்படையில் இந்த பங்கில் இனி தொடர்ந்து BUYING செய்வது ஆபத்தை உருவாக்கும் என்றும், இனி இந்த பங்கில் இருந்து வெளியேறுவதே சிறந்தது என்று எடுத்துக்கொண்டு நாம் நம்மை பாதுகாத்து கொள்ளலாம், பொதுவாக இந்த இரண்டு வடிவங்களும் ஒரு பங்கில் அல்லது சந்தையில் TREND REVERSAL ஆக போவதை முன்கூட்டியே நமக்கு சொல்லும் வடிவமாக எடுத்துக்கொண்டு கவனமாக இருக்கலாம், EVENING STAR DOJI இன் படத்தை பாருங்கள்

PICTURE 3:-

LONG UPPER LEG DOJI :-



இந்த வடிவமானது பொதுவாக EVENING STAR DOJI யில் ஏற்ப்படும் வாய்ப்புகள் உண்டு, அதாவது ஒரு பங்கு அன்றைய தினம் தனது வர்த்தகத்தை தொடங்கிய புள்ளியில் இருந்து மிக அதிகமாக உயர்ந்து, உயர் நிலைகளில் தாக்கு பிடிக்க முடியாமல் கீழே வீழ்ச்சி அடைந்து OPEN விலைக்கு சற்று மேலேயோ அல்லது OPEN விலையிலோ அல்லது OPEN விலைக்கு சற்று கீழேயோ முடிவடைவது (CLOSE ஆவது) LONG UPPER LEG DOJI என்று பெயர், இது போன்ற அமைப்பு வரும் சூழ்நிலையில் இந்த பங்கில் வீழ்ச்சிகள் வரப்போகிறது, ஆகவே சற்று கவனமாக இருங்கள் என்று எச்சரிக்கை செய்வதாக எடுத்துக்கொள்ளலாம்

LONG UPPER LEG DOJI என்பது நீண்ட வாழ் போன்ற கோட்டினை உயரத்தில் பெற்று இருப்பது, மேலும் ஒரு பங்கு தொடர்ந்து கீழ் இறக்கத்தில் இருக்கும் போது TECHNICAL ஆக இடையே சில உயர்வுகளை சந்திக்கும் வாய்ப்புகள் உருவாகலாம் அப்படி இடையே ஏற்ப்படும் உயர்வுகளில் திடீர் என்று இது போன்ற LONG UPPER LEG DOJI என்ற வடிவத்தை பெறுமானால் இன்னும் அந்த பங்கில் கீழ் இறக்கம் (DOWN SIDE) இருக்கும் என்று எடுத்துக்கொள்ளலாம், அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் இந்த பங்கில் BUYING கவனம் செலுத்தினாலும் மிக மிக குறைவான லாபங்களுடன் வெளியேறிவிட வேண்டும் அல்லது அந்த பங்கில் BUYING நிலைகளை எடுக்காமல் இருப்பது சிறந்தது, LONG UPPER LEG DOJI இன் படத்தை பாருங்கள்

PICTURE 4:-

LONG LOWER LEG DOJI:-



இந்த வடிவமானது பொதுவாக MORNING STAR DOJI யில் ஏற்ப்படும் வாய்ப்புகள் உண்டு, அதாவது ஒரு பங்கு அன்றைய தினம் தான் வர்த்தகத்தை தொடங்கிய புள்ளியில் இருந்து மிக அதிகமாக வீழ்ச்சி அடைந்து , கீழ் நிலைகளில் தொடர்ந்து இறக்கம் காட்டாமல் தொடர்ந்து உயர்ந்து OPEN விலைக்கு சற்று மேலேயோ அல்லது OPEN விலையிலோ அல்லது OPEN விலைக்கு சற்று கீழேயோ முடிவடைவது (CLOSE ஆவது) LONG LOWER LEG DOJI என்று பெயர், இது போன்ற அமைப்பு வரும் சூழ்நிலையில் இந்த பங்கில் உயர்வுகள் வரப்போகிறது, ஆகவே SHORT SELLING இல் இருப்பவர்கள் சற்று கவனமாக இருங்கள் என்று எச்சரிக்கை செய்வதாக எடுத்துக்கொள்ளலாம், மேலும் இந்த பங்கில் BUYING இல் கவனம் செலுத்தலாம் என்று நமக்கு சொல்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம்

LONG LOWER LEG DOJI என்பது நீண்ட வாழ் போன்ற கோட்டினை கீழே பெற்று இருப்பது, மேலும் ஒரு பங்கு தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கும் போது TECHNICAL ஆக இடையே சில வீழ்ச்சிகளை (CONSOLIDATION க்காக) சந்திக்கும் வாய்ப்புகள் இருக்கலாம், அது போன்று இடையே ஏற்ப்படும் வீழ்ச்சிகளில் திடீர் என்று இது போன்ற LONG LOWER LEG DOJI என்ற வடிவத்தை பெறுமானால் இன்னும் அந்த பங்கில் உயர்வுகள் (UP SIDE) இருக்கும் என்று எடுத்துக்கொள்ளலாம்,

அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் இந்த பங்கில் நாம் தொடர்ந்து BUYING இல் கவனம் செலுத்தலாம், அதே நேரம் அதிகமாக உயர்ந்து விட்டது என்று உங்கள் நிலைகளில் இருந்து வெளியேறாமலும், முக்கியமாக SHORT SELL பண்ணாமலும் இருப்பது நல்லது LONG LOWER LEG DOJI இன் படத்தை பாருங்கள்

PICTURE 5:-

இந்த வகையில் மேலும் இரண்டு விசயங்களை நான் சொல்லியாக வேண்டும் அதாவது MORNING STAR CANDLE, மற்றும் EVENING STAR CANDLE, அதாவது இதில் DOJI என்ற வார்த்தை மாட்டும் தான் விடுபட்டுள்ளது மற்றபடி இதுவும் MORNING STAR DOJI மற்றும் EVENING STAR DOJI யின் விளைவுகளையே ஏற்ப்படுத்தும் அதாவது MORNING STAR DOJI என்பது குறிப்பிட்ட இறக்கத்திற்கு பிறகு வரும் அப்படி வந்தால் இறக்கம் தடைபட்டு உயருவதற்கு வாய்ப்புகள் ஏற்ப்படும் என்று பார்த்தோம் இல்லையா அதே விளைவுகளை தான் இந்த MORNING STAR CANDLE ம் தரும்,

ஆனால் DOJI என்பது OPEN மற்றும் CLOSE புள்ளிகளுக்கு இடையேயான இடைவெளி மிக மிக குறைவாகவோ அல்லது இடைவெளி இல்லாமலோ இருக்கும், ஆனால் இந்த MORNING STAR CANDLE லில் இடைவெளிகள் சற்று கொஞ்சம் இருக்கலாம் அதே நேரம் மற்ற அமைப்புகள் DOJI ஐ போலவே இருக்க வேண்டும் இந்த படத்தையும் பாருங்கள், இதே போல் தான் EVENING STAR CANDEL உம், EVENING STAR CANDLE உயரங்களிலும் MORNING STAR CANDLE இறக்கங்களிலும் வரும் சரி இந்த படத்தையும் பாருங்கள்

PICTURE 6:-

என்ன நண்பர்களே DOJI என்ற வடிவத்தின் முக்கியத்துவம் புரிந்ததா, அடுத்து நாம் மற்ற வடிவங்களை பற்றி பார்ப்போம்

1 comment:

  1. Visit www.nifty-intraday.blogspot.com for short term delivery calls & Nifty levels.

    ReplyDelete