Monday, October 26, 2009

பயில்வோம் பங்கு சந்தை பாகம் 10

SOLID GREEN, EMPTY RED இவைகள் இரண்டையும் இன்னும் எளிதாக புரியும்படி சொல்ல வேண்டி சில நண்பர்கள் கேட்டு இருந்தார்கள், அவர்களுக்காக மறுபடியும் பார்ப்போம்,

SOLID GREEN :-

SOLID GREEN என்ற வண்ணத்தில் ஒரு பங்கின் CANDLE இருந்தால் குழப்பம் அடைய விஷயம் ஒன்று இல்லை, அன்றைய தினம் அந்த பங்கு இறங்கியுள்ளது என்று அர்த்தம் அதே நேரம் அந்த பங்கின் நேற்றைய CLOSE புள்ளிக்கும் மேல் இன்று CLOSE ஆகி உள்ளது என்றும் அர்த்தம், ஆகவே SOLID GREEN என்ற வண்ணத்தில் ஒரு CANDLE இருக்க வேண்டுமானால், இரண்டு விஷயங்கள் நடக்க வேண்டும்,

ஒன்று:–

அந்த பங்கு அன்றைய தினம் இறக்கத்தில் முடிந்து இருக்க வேண்டும்

இரண்டு:-

அந்த பங்கின் முடிவு விலை நேற்றைய முடிவு விலைக்கும் மேலே இருக்க வேண்டும்

உதாரணம் :-

OPEN - 500 ,, HIGH - 520,, LOW - 480,, CLOSE – 482,, நேற்றைய CLOSE - 478

இந்த உதாரணத்தில் இந்த பங்கு 500 என்ற புள்ளியில் தொடங்கி 520 என்ற புள்ளி வரை உயர்ந்து இருந்தாலும் இந்த பங்கின் முடிவு 482 என்ற புள்ளியில் அமைந்துள்ளது, அப்படியானால் தொடங்கிய புள்ளியில் இருந்து இறங்கி முடிந்துள்ளது, மேலும் நேற்றைய CLOSE புள்ளியான 478 க்கு மேலே 482 என்ற புள்ளியில் இன்று CLOSE ஆகியுள்ளது ஆகவே இன்று SOLID GREEN என்ற வகையில் அமைந்து இருக்கும்

இதே போல் தான் EMPTY RED என்ற நிறமும் அன்றைய தினம் உயர்ந்து இருந்தாலும் நேற்றய CLOSE புள்ளிக்கும் கீழே இன்று CLOSE ஆனால் அது EMPTY RED என்ற நிறத்தில் இருக்கும்

உதாரணம் :-

OPEN – 515,, HIGH – 530,, LOW – 505,, CLOSE – 518.. நேற்றைய CLOSE - 525

இந்த உதாரணத்தில் OPEN ஆனா விலையை விட உயர்ந்து இருந்தாலும் நேற்றைய CLOSE புள்ளியை விட கீழே முடிந்து இருப்பதினால் EMPTY RED என்ற நிறத்தில் இருக்கும் புரிந்ததா ?


சரி இதுவரை பார்த்து வந்த விஷயங்களை வைத்து ஓரளவு அடிப்படை விஷயங்கள் உங்களுக்கு தெளிவாகி இருக்கும், அதன் மேற்கொண்டு சில பயிற்ச்சிகளை நாம் எடுத்துக்கொண்டால் இன்னும் சிறப்பாக அமையும், அந்த வகையில் இது வரை நாம் பார்த்து வந்த விசயங்களில் இருந்து சில விசயங்களை பற்றி உங்களிடம் கேள்விகளாக கேட்கின்றேன் அவைகளுக்கு பதில் எழுதி அனுப்புங்கள் சரியாக உள்ளதா என்று நானும் உங்களுக்கு பதில் தருகிறேன், அல்லது நீங்களே இதுவரை படித்த விஷயங்கள் உங்கள் ஞாபகத்தில் உள்ளதா என்று பரிசோதித்து கொள்ளவும் இந்த முயற்சி உதவியாக இருக்கும்,,

கேள்விகள் சில

1) TECHNICAL ANALYSING என்றால் என்ன ?

2) TECHNICAL ANALYSING இன் தந்தை எனப்படுபவர் யார் ? அவர் சொன்ன முக்கியமான மூன்று விஷயங்கள் என்ன?

3) FUNDAMENTAL ANALYSING என்றால் என்ன ?

4) FUNDAMENTAL ANALYSING செய்வதற்கு தேவையான காரணிகள் எவை எவை?

5) FUNDAMENTAL மற்றும் TECHNICAL ANALYSINGகிற்கு இடையேயான வேறுபாடுகள் என்ன

6) TECHNICAL வரை படங்கள் வரைவதற்கு தேவையான் புள்ளிகள் எவை, எவை ?

7) TECHNICAL CHART இன் வகைகள் எவை எவை ?

8) CHART இல் உள்ள CANDLE களின் நிறங்கள் எவை ?

9) CANDLE களின் நான்கு விதமான நிறங்களின் மூலம் நீங்கள் அறிவது என்ன ?

10) கீழே கொடுத்துள்ள OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகளை வைத்து அதற்க்கு பொருத்தமான CANDLE STICK CHART படங்களை வரைக..

உதரணத்திற்கு சில OPEN, HIGH, LOW, CLOSE புள்ளிகளை தந்துள்ளேன், இந்த புள்ளிகளை வைத்து அதற்க்கு ஏற்ற CANDLE படங்களை அதற்க்கு உரிய நிறத்தில் வரைந்து பாருங்கள், கண்டிப்பாக செய்யுங்கள் (உங்களுக்கு உண்மையாகவே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கண்டிப்பாக செய்யவேண்டும்), அப்படி செய்யும் போது அநேக சந்தேகங்கள் உங்களுக்கு வரும் அப்படி வரும் சந்தேகங்களை குறித்து வைத்து மொத்தமாக எனக்கு அனுப்புங்கள், கண்டிப்பாக நிவர்த்தி செய்ய ஆவலாக உள்ளேன்

SAMPLE POINTS

1) OPEN - 400, HIGH - 422, LOW - 394, CLOSE 415

2) OPEN - 412, HIGH - 418, LOW - 400, CLOSE 414

3) OPEN - 450, HIGH - 450, LOW - 410, CLOSE 413

4) OPEN - 410, HIGH - 418, LOW - 404, CLOSE 412

5) OPEN - 403, HIGH - 418, LOW - 394, CLOSE 410

6) OPEN - 400, HIGH - 415, LOW - 400, CLOSE 409

7) OPEN - 420, HIGH - 422, LOW - 405, CLOSE 415

8) OPEN - 425, HIGH - 425, LOW - 418, CLOSE 419

9) OPEN - 400, HIGH - 422, LOW - 394, CLOSE 401

10) OPEN - 400, HIGH - 420, LOW - 394, CLOSE 400

11) OPEN - 400, HIGH - 427, LOW - 394, CLOSE 399

முக்கியமான CHART உருவங்கள்

சரி பயிற்ச்சி முடிந்த பின் அடுத்து CHART படங்களில் தோன்றும் சில முக்கியமான உருவங்களை பற்றியும், அப்படி அந்த உருவங்கள் வந்தால் அதற்க்கு சந்தையில் என்ன மாதிரியான விளைவுகள் இருக்கும் என்றும் பார்ப்போம், அதாவது நாம் ஒரு குறிப்பிட்ட பங்கை ANALYSE செய்யும் போது அந்த பங்கின் ஒவ்வொரு நாள் CANDLE ஐ பார்த்து ANALYSE செய்யக்கூடாது அதற்க்கு பதில் அந்த பங்கில் கடந்த சில வாரங்களாக அல்லது மாதங்களாக நமக்கு கிடைத்து இருக்கும் ஒவ்வொரு நாள் CANDLE களையும் வைத்து தான் ஆராய வேண்டும் அப்படி செய்தால் தான் அந்த பங்கின் நகர்வுகள் எதை நோக்கி நகர்கிறது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்,

அதே நேரம் சில சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட நாளில் தோன்றும் CHART CANDLE படங்கள் (உருவங்கள்) சில முக்கியமான அடுத்த கட்ட நகர்வுகளை தீர்மானிக்கும் சக்தியை பெற்று இருக்கும் அது போன்ற சில உருவங்களை பற்றி நாம் இப்பொழுது பார்க்க போகிறோம், இதற்க்கு பெயர் வேண்டுமானால் வெவேறு மாதிரியாக இருக்கலாம், ( DOJI, HAMER, ENGULFING, HARAMI, PIERCING LINE என்பன போன்ற அநேக விஷயங்கள் உண்டு அதில் மிக முக்கியமான சில வற்றை பற்றி பார்ப்போம் ) ஆனால் இதில் உள்ள விஷயம் என்ன என்பதை நான் முதலில் உங்களுக்கு புரிய வைத்து விடுகிறேன்,

அதாவது ஒரு குறிப்பிட்ட பங்கின் அன்றைய தின OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகளை வைத்து அடுத்த நாள் அந்த பங்கின் நகர்வை நாம் ஒரு 50% அளவிற்கு தீர்மானிக்கலாம் என்று கடந்த வாரங்களில் பார்த்தோம் இல்லையா, அதே தான், அந்த வகையில் சில முக்கியமான OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகளை ஒரு பங்கு பெற்று இருந்தால் அடுத்த நாள் சொல்லி கொள்ளும்படியான சில நகர்வுகள் நடக்கலாம் என்பது TECHNICAL கற்றவர்கள் அனைவரும் கண்ட உண்மையே, ஆகவே அது போன்ற சிறப்பான முடிவுகளை தரும் சில வகை உருவங்களை பற்றி பார்ப்போம்,

மேலும் இது போன்ற உருவங்கள் இரண்டு இடங்களில் தான் தனது முழு பலத்துடன் இருக்கும் அதாவது விமானத்தில் பல சாகசங்களை செய்தவர் எவளவு பெரிய விமானமாக இருந்தாலும் சாதித்து காட்டிவிடுவார், அனால் அவரை கப்பலில் ஏறி காட்டய்யா உமது சாகசத்தை என்று சொன்னால் நடக்குமா, இருந்தாலும் ஏதாவது முயற்சி செய்ய அவர் முயலுவார், (எல்லாமே ENGINE வகையை சேர்ந்ததுதானே என்று),

அது போல தான் நான் குறிப்பிடும் இந்த உருவ அமைப்புகள் அந்த பங்கு நன்றாக உயர்ந்து, இதற்க்கு மேல் உயர்வது கஷ்டம் என்ற நிலையில் இருக்கும் போதும், நன்றாக இறக்கத்தை சந்தித்து இனி இறங்க வழியில்லை, உயர்வுதான் என்ற நிலையில் இருக்கும் போதும் தனது முழு பலத்தை காண்பிக்கும், ஆகவே அது போன்ற விளைவுகளை தரும் முக்கியமான உருவங்களை பற்றி பார்க்க போகிறோம், அடுத்த வாரம் பார்ப்போம், அடுத்து நான் கேட்ட கேள்விகளுக்கு கண்டிப்பாக பதில் தாயார் செய்து விடுங்கள்

1 comment:

  1. அருமையான பதிவுகள்!!!!!

    பங்கு சந்தை, பற்றி தெரிந்துகொள்ள,
    மற்றும் பணம் பண்ண Free Mcx Tips , Free Stock Tips
    For earn money in free time visit Mcx Tips, Share Tips,
    To earn daily 5000-10000 rupees by our Free Mcx Tips , Free Stock Tips and earn money by investing stock market

    ReplyDelete