Thursday, August 20, 2009

OPEN INTEREST என்றால் என்ன?

OPEN INTEREST என்பது பொதுவாக FUTURE & OPTION மற்றும் COMMODITY வர்த்தகத்தில் பயன் படுத்தப்படும் ஒரு சொல், இது பொதுவாக ஒரு குறிப்பிட்ட FUTURE CONTRACT இன் போக்குகளின் தொடர்ச்சி (STRENGTH OF THE TREND), முடிவு (END OF THE TREND) மற்றும் அந்த குறிப்பிட்ட FUTURE CONTRACT இன் அடுத்தக்கட்ட நகர்வு (TREND REVERSAL), ஆகியவைகளை தெரிந்து கொள்ள பயன் படுத்தப்படும் ஒரு முக்கியமான INDICATOR ஆகும்.

பொதுவாக OPEN INTEREST என்பது ஒரு குறிப்பிட்ட வர்த்தக் தினத்தின் முடிவில் அன்று நடந்த வர்த்தகத்தில் இன்னும் முடிக்கப்படாத (SQUARE OFF பண்ணப்படாத அதாவது இன்று வாங்கி இனிவரும் நாட்களில் விற்கலாம் என்ற வகையில்) CONTRACT களின் எண்ணிக்கையை காட்டும் ஒரு அளவுகோல்.

OPEN INTEREST எப்படி உயருகிறது எப்படி வீழ்கிறது என்று பார்ப்போம்

பொதுவாக நாம் ஒரு பங்கினை வாங்குவது போல் அனைவரும் வாங்க வாங்க அந்த பங்கின் VOLUME உயரும் இல்லையா, அதே போல் தான் இந்த OPEN INTEREST லும் VOLUME உயரும் ஆனால் இதில் எப்படி நடை பெறுகிறது என்று பார்ப்போம்

முதலில் OPEN INTEREST உயருவதற்கான காரணம் என்ன என்று பார்ப்போம்

அதாவது
ஒரு CONTRACT ஐ ஒருவர் உயரும் என்ற எண்ணத்தில், (ஏறியவுடன் லாபம் பார்க்கும் நோக்கத்தில்) வாங்குகிறார், இவர் வாங்கும் இந்த CONTRACT ஐ யாராவது ஒருவர் விற்று இருக்க வேண்டும் இல்லையா, அப்படி விற்பவர் ஏற்கனவே வாங்கி அதை லாபத்துடனோ அல்லது நட்டத்துடனோ விற்ப்பவராக இருக்கக்கூடாது , இறங்கும் என்ற எண்ணத்தில் புதிதாக SHORT SELL செய்பவராக இருக்க வேண்டும், அப்படி இருந்தால் OPEN INTEREST இல் ஒரு புள்ளி உயரும், என்ன புரிய வில்லையா

ஒரு புதியவர் விற்று / மற்றொரு புதியவர் வாங்கினால் OPEN INTEREST இல் ஒரு புள்ளி உயரும்.

OPEN INTEREST வீழ்வதற்கான காரணம் என்ன என்று பார்ப்போம்

அதாவது
ஒரு CONTRACT ஐ ஏற்கனவே வாங்கியவரும் (உயரும் என்ற எண்ணத்தில் BUY செய்தவர்), அதே போல் இறங்கும் என்ற எண்ணத்தில் ஏற்கனவே விற்றவரும் (SHORT SELL செய்தவரும்), ஒருவருக்கொருவர் தங்கள் பரிமாற்றங்களை (POSITION ஐ முடித்துக்கொள்லுதல்) நிகழ்த்திக்கொண்டால் OPEN INTEREST இல் ஒரு புள்ளி கீழே வரும்.

பரிமாற்றங்கள் நிகழ்ந்தாலும் OPEN INTEREST இல் எந்தவிதமான மாற்றங்களும் நிகழாமல் இருக்கும் அது எப்படி என்று பார்ப்போம்

ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட CONTRACT இல் POSITION இல் இருப்பவர் புதிதாக இந்த CONTRACT இல் வர்த்தகம் செய்ய வருபவரிடம் விற்றாலும் அல்லது வாங்கினாலும் OPEN INTEREST இல் எந்த விதமான மாற்றங்களும் நிகழாது, இன்னும் புரிய வில்லை என்றால் கீழே உள்ள அட்டவணையை பாருங்கள் புரியும்

கீழ் கண்ட வகையில் வர்த்தகம் நடந்தால்

NEW BUYER - NEW SELLER = OPEN INTEREST அதிகமாகும்
OLD BUYER - OLD SELLER = OPEN INTEREST குறையும்
NEW BUYER - OLD BUYER = OPEN INTEREST எந்த வித மாற்றங்களும் இல்லை
NEW SELLER - OLD SELLER= OPEN INTEREST எந்த வித மாற்றங்களும் இல்லை

(ஏற்கனவே வாங்கியவர் புதியவரிடம் விற்றாலும், ஏற்கனவே விற்றவர் புதியவரிடம் வாங்கிலும் எந்த மாற்றமும் இலலை).

இப்போ புரிகிறதா!

சரி OPEN INTEREST ஐ பற்றி ஓரளவு திரிந்து கொண்டாகி விட்டது அடுத்து OPEN INTEREST இல் ஏற்ப்படும் மாற்றங்கள் அதனால் சந்தைகளில் ஏற்ப்படும் விளைவுகள் ஆகியவற்றை பற்றி பார்ப்போம்

ஏதாவதொரு FUTURE CONTRACT கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், இந்த உயர்வு தொடருமா என்பதை நாம் OPEN INTEREST இல் ஏற்ப்படும் சில மாற்றங்களை வைத்து முடிவு செய்யலாம்,

அதாவது
1- OPEN INTEREST தனது நிலையில் இருந்து மேலும் உயர்ந்து அதே நேரத்தில் அந்த FUTURE CONTRACT இன் விலைகளிலும் உயர்வு இருந்தால், இந்த FUT CONTRACT தொடர்ந்து உயரும் (அதாவது நிறைய புதியவர்கள் தொடர்ந்து இந்த FUT CONTRACT ஐ இன்னும் வாங்கிக்கொண்டு இருக்கின்றார்கள் புதிய முதலீடுகள் இங்கு நடக்கின்றது என்று அர்த்தம்), ஆகவே இந்த உயர்வு தொடரும், இப்படி இருக்கும் போது நாமும் வாங்கி விற்று வர்த்தகம் செய்யலாம்.

ஏதாவதொரு FUTURE CONTRACT கடந்த சில நாட்களாக வீழ்ந்து வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், இந்த வீழ்ச்சி தொடருமா என்பதை நாம் OPEN INTEREST இல் ஏற்ப்படும் சில மாற்றங்களை வைத்து நாம் முடிவு செய்யலாம்,
அதாவது

2- OPEN INTEREST தனது நிலையில் இருந்து மேலும் உயர்ந்து அதே நேரத்தில் அந்த FUTURE CONTRACT இன் விலைகளிலும் வீழ்ச்சிகள் இருந்தால், இந்த FUT CONTRACT தொடர்ந்து கீழே வரும் (அதாவது நிறைய புதியவர்கள் தொடர்ந்து இந்த FUT CONTRACT ஐ இன்னும் விற்றுக்கொண்டு (SHORT SELL) தான் இருக்கின்றார்கள் என்று அர்த்தம்), ஆகவே இந்த வீழ்ச்சி தொடரும், இப்படி இருக்கும் போது நாமும் விற்று வாங்கி (SHORT SELL) வர்த்தகம் செய்யலாம்

ஏதாவதொரு FUTURE CONTRACT இல் குறிப்பிட்ட அளவுக்கு உயர்வு ஏற்ப்பட்ட பிறகோ, அல்லது குறிப்பிட்ட அளவு வீழ்ச்சிகள் ஏற்ப்பட்ட பிறகோ OPEN INTEREST இல் ஏற்ப்படும் கீழ் கண்ட மாறுதல்களை வைத்து, அந்த CONTRACT இன் அடுத்த கட்ட நகர்வுகள் (TRENT REVERSAL) எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கலாம்,

அதாவது
OPEN INTEREST இல் எந்த பெரிய மாற்றங்களும் (FLAT) இல்லாமலோ அல்லது சற்று குறைந்தோ இருந்து அந்த CONTRACT இன் விலைகளில் நிறைய மேலும் கீழுமான ஆட்டங்கள் (VOLATILE) இருந்தால் அந்த CONTRACT இது வரை தான் இருந்த TRENT இல் இருந்து தனது நிலையை வெகு விரைவில் மாற்றப்போகிறது என்று அர்த்தம், (அதாவது ஏற்கனவே POSITION இல் இருப்பவர்கள் தங்களது POSITION ஐ SQUARE OFF செய்கிறார்கள் என்று அர்த்தம், இப்படி இருக்கும் போது நாமும் நமது POSITION ஐ முடித்துக்கொள்ளலாம்.

இந்த அட்டவணையை பாருங்கள் இன்னும் புரியும்

PRICE==O.I==RESULT

UP==UP==MARKET STRONG

UP==DOWN==MARKET WEAK

DOWN==UP==MARKET WEAK

DOWN==DOWN OR FLAT==TREND REVERSAL

No comments:

Post a Comment