Tuesday, August 18, 2009

பங்குச்சந்தையின் மிகப்பெரிய ஏற்றங்களும் இறக்கங்களும்


1000, July 25, 1990

சென்செக்ஸ் முதன்முறையாக நான்கு இலக்கங்களை (4 digit) தொட்டது.

2000, January 15, 1992

சென்செக்ஸ் இரண்டாயிரம் புள்ளிகளை கடந்து இறுதியில் 2020-ல் நிலைகொண்டது. இதற்கு அப்போதைய நிதியமைச்சரும் (Finance minister), தற்போதைய பிரதமருமான டாக்டர். மன்மோகன்சிங்கின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையே காரணமாகும்.

3000, February 29, 1992

சென்செக்ஸ் மூண்றாயிறம் புள்ளிகளை கடந்தது. இதற்கு அப்போதைய நிதியமைச்சர் டாக்டர். மன்மோகன்சிங்கின் நிதியறிக்கையே (Finance budget) காரணமாகும்.

4000, March 30, 1992

சென்செக்ஸ் நான்காயிரம் புள்ளிகளை கடந்து இறுதியில் 4,091-ல் நிலைகொண்டது. இதற்கு ஹர்சாத் மேத்தா (Harshat Mehta) என்பவர் பங்குச்சந்தையில் செய்த தில்லுமுல்லுகளே (scam) காரணமாகும்.

5000, October 8, 1999

சென்செக்ஸ் ஐந்தாயிரம் புள்ளிகளை கடந்தது. இதற்கு பி.ஜே.பி (BJP) கூட்டனி கட்சிகள் பாரளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியே காரணம்.

6000, February 11, 2000

தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்ப்பட்ட புரட்சியின் காரணமாக சென்செக்ஸ் ஆறாயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது.

7000, June 20, 2005

அம்பானி சகோதர்களிடையே இருந்துவந்த சொத்து விவகாரத்திற்கு சுமூக தீர்வு ஏற்ப்பட்டதின் மூலமாக ரிலையன்ஸ் (Reliance) குழுமத்தின் பங்குகள் நிறைய லாபம் சம்பாதித்தது. இதன் காரணமாக பங்குச்சந்தை முதன் முறையாக ஏழாயிரம் புள்ளிகளை கடந்தது.

8000, September 8, 2005

அந்நிய முதலீடுகளின் (Foreign investments) காரணமாக பங்குச்சந்தை எட்டாயிரம் புள்ளிகளை கடந்தது.

9000, November 28, 2005

பங்குச்சந்தை ஒன்பதாயிரம் புள்ளிகளை கடந்தது.

10,000, February 6, 2006

பங்குச்சந்தை பத்தாயிரம் புள்ளிகளை கடந்தது சாதனை படைத்தது.

11,000, March 21, 2006

பங்குச்சந்தை பதிணொராயிரம் புள்ளிகளை கடந்தது சாதனை படைத்தது.

12,000, April 20, 2006

பங்குச்சந்தை பன்னிரெண்டாயிரம் புள்ளிகளை கடந்தது சாதனை படைத்தது.

13,000, October 30, 2006

பங்குச்சந்தை பதிமூண்றாயிரம் புள்ளிகளை கடந்தது.

14,000, December 5, 2006

பங்குச்சந்தை பதினாங்காயிரம் புள்ளிகளை கடந்தது.

15,000, July 6, 2007

சரியாக ஏழு மாதங்களுக்கு பிறகு பங்குச்சந்தை பதினைந்தாயிரம் புள்ளிகளை கடந்தது.

16,000, September 19, 2007

பங்குச்சந்தை பதினாறாயிரம் புள்ளிகளை கடந்தது. இக்காலக்கட்டதில் பங்குச்சந்தை சீரான வளர்ச்சியை கண்டது.

17,000, September 26, 2007

பங்குச்சந்தை மற்றுமொறு மைல்கல்லான பதினேழாயிரம் புள்ளிகளை கடந்தது.

18,000, October 09, 2007

ஐக்கிய முற்போக்கு கூட்டனிக்கும் (UPA – United Progressive Allaiance) இடதுசாரிகளுக்கும் (Left parties) இடையே ஏற்ப்பட்ட சுமூகமான ஒப்பந்தத்தின் விளைவாக இடைத்தேர்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதன் காரணமாக பங்குச்சந்தை பதினெட்டாயிரம் புள்ளிகளை கடந்தது.

19,000, October 15, 2007

பங்குச்சந்தை பத்தொண்பதாயிரம் புள்ளிகளை கடந்தது.

20,000, October 29, 2007

பங்குச்சந்தை சாதனை புள்ளிகளான இருபதாயிரத்தை தொட்டது.

21,000, January 8, 2008

FII (Foreign Institutional Investor) முதலீடுகளின் காரணமாக சென்செக்ஸ் இருபத்து ஓராயிரம் புள்ளிகளை கடந்தது.

15,200, June 13, 2008

சர்வதேச சந்தையில் கச்சா (Oil) எண்னை விலை உயர்வு காரணமாக, பணவீக்க உயர்வு (Inflation) அதைத்தொடர்ந்து அத்தியாவசி பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் சென்செக்ஸ் பதினைந்தாயிரத்து இருநூறு புள்ளிகளுக்கு சரிந்தது.

14,220, June 25, 2008

ரிசர்வ் வங்கி (Reserver Bank of India) பணயிருப்பு விகிதத்தை உயர்த்தியதின் விளைவாக சென்செக்ஸ் மேலும் சரிந்து பதினாங்காயிரத்து இருநூற்றியிருபத்து இருபதில் நிலைகொண்டது.

No comments:

Post a Comment